"மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றில் இருந்து தப்ப முடியாது" WHO எச்சரிக்கை
மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத நிலையில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும், மாஸ்க் அணிவதுமே அதனை கட்டுப்படுத்த முக்கிய வழிகளாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக பல நாடுகள் மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் அறிவித்துள்ளன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளில், மக்களின் பாதுகாப்பில் தவறான தகவல்களை வழங்கக் கூடாது எனவும், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் மக்கள் துணியால் ஆன மாஸ்கையே பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
WHO updated guidance on the use of masks for control of #COVID19: https://t.co/z6DTZLG5Qs
— World Health Organization (WHO) (@WHO) June 5, 2020
The new guidance is based on evolving evidence and provides updates on:
?who should wear a mask
?when a mask should be worn
?what a mask should be made of pic.twitter.com/Cu7MEyCs3J
Comments